உள்ளூர்

யாழில் முக்கிய பகுதியில் இயங்கிவரும் இரு உணவகங்களுக்கு அதிரடி சீல்!

Published

on

யாழில் உள்ள முக்கிய நகர் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிவந்த இரண்டு உணவகங்களை நீதிமன்ற அனுமதியுடன் சுகாதாரப் பிரிவினரால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பாலமுரளி அவர்களின் அறிவுறுத்தலின் பிரகாரம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர் குழுவினரால் நேற்றையதினம் (08-08-2023) யாழ்ப்பாண நகர் பகுதி உணவகங்கள் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த யாழ். பேருந்து நிலையத்திற்கு பின்புறம் அமைந்துள்ள ஒரு அசைவ உணவகமும், யாழ். பண்ணை பகுதியில் அமைந்துள்ள ஒரு அசைவ உணவகமும் பொது சுகாதார பரிசோதகர்களின் பரிசோதனையில் சிக்கின.

இரண்டு உணவக உரிமையாளர்களிற்கும் எதிராக இன்றைய தினம் (09-08-2023) யாழ்ப்பாண மேலதிக நீதவான் நீதிமன்றில் யாழ்ப்பாண நகர் பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கினை விசாரணை செய்த நீதவான் உணவக உரிமையாளர்களை தலா ஒரு இலட்சம் பிணையில் விடுவித்ததுடன், குறைபாடுகள் நிவர்த்தி செய்யும் வரை உணவகங்களை சீல் வைத்து மூடுமாறு கட்டளை வழங்கிய நிலையில் வழக்கினை 18.10.2023ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version