உள்ளூர்
57 வயது மருமகனால் பாட்டியை துஷ்பிரயோகம் !
கம்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குருந்துவத்த வாகெதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் தனது பாட்டியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
குறித்த நபர் 57 வயதுடையவர் என்றும் பாதிக்கப்பட்ட 82 வயதுடைய பாட்டியின் மருமகன் எனவும் விசாரணைகளின் போதுத் தெரியவந்துள்ளது.
விசாரணைகளை மேற்கொண்ட குருந்துவத்தை பொலிஸார், பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட பாட்டியின் மகள் , சந்தேக நபரின் இளைய சகோதரனை திருமணம் செய்துள்ளதாக நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்திருந்தனர்.
வயோதிபப் பெண் திருமணமான தனது மகளுடன் வசித்துவந்த நிலையில் யாரும் இல்லாத நேரத்தில் சந்தேக நபர் வீட்டுக்குச் சென்று துஷ்பிரயோகம் செய்ததாகவும், இதுபற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும் கூறியதாகவும் பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.