உலகம்

நைஜீரியாவில் தலை விரித்தாடும் பயங்கரவாதிகள்: விவசாயிகள் தலை துண்டித்து கொலை!

Published

on

நைஜீரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்காகி  10 விவசாயிகள் கொள்ளப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன்போது என் நண்பர்கள் 10 பேரின் பிணங்களை நான் கண்டேன் என  தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு உயிர் தப்பிய விவசாயி தெரிவித்துள்ளார்.

குறித்த தீவிரவாதிகள் நேற்று (31.07.2023) துப்பாக்கிகளை ஏந்தியபடி மோட்டார் சைக்கிலில் வந்து இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளனர். 

விவசாயிகள் தாக்கப்பட்டு

வயல் வேலையில் இருந்த விவசாயிகள் தாக்கப்பட்டு, அவர்களின் தலைகளை வெட்டி கொன்றுள்ளனர். கொடூரமாக கொல்லப்பட்டு தலை துண்டிக்கப்பட்ட என் நண்பர்கள் 10 பேரின் பிணங்களை நான் கண்டேன்” என அவர்களிடம் இருந்து தப்பிய ஒரு விவசாயி அபுபக்கர் மஸ்தா கூறியுள்ளார்.

உள்நாட்டு கிளர்ச்சியில்  பொது மக்களில் 25 பேர் கொலை

நைஜீரியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள போர்னோ நகரம் பயங்கரவாதிகளின் மையமாக திகழ்கிறது.

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நைஜீரியா நாட்டில் நடைபெற்று வரும் உள்நாட்டு கிளர்ச்சியில் கடந்த வாரம் பொது மக்களில் 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அங்குள்ள கொண்டூகா பகுதியில் உள்ள கவூரி கிராமத்தில் போகா ஹராம் பயங்கரவாதிகள், வயலில் வேலை செய்து கொண்டிருந்த 10-க்கும் மேற்பட்ட விவசாயிகளை தாக்கி, அவர்களின் தலைகளை வெட்டி கொன்றுள்ளனர்.

2,000 ஆண்டிலிருந்தே செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்பு

இந்த கொடூர கொலைகளின் பின்னணியில் போகோ ஹராம் எனும் தீவிரவாத இயக்கம் உள்ளது. நைஜீரியாவில் 2,000 ஆண்டிலிருந்தே செயல்பட்டு வரும் இந்த தீவிரவாத அமைப்பினால் அந்நாட்டில் பல ஆயிரக்காணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த வன்முறை இயக்கம் அண்டை நாடுகளான சாட் மற்றும் கேமரூன் பகுதிகளுக்கும் பரவியிருக்கிறது. ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் ஆப்பிரிக்க பிரிவான மேற்கு ஆப்பிரிக்காவின் ஐ.எஸ். அமைப்பு தீவிரமாக செயல்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கையின் உறுதிப்படுத்தப்பட்ட உண்மைச் செய்தி வழங்குனரான நாழிகையுடன் இணைந்திருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version