உள்ளூர்
முன்னாள் காதலனின் வெறிச் செயல்; காதலி கொடூரமாக வெட்டிக்கொலை!
கம்பஹாவில் யுவதி ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் கம்பஹா – மினுவாங்கொடை பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
உயிரிழந்த யுவதி
அப்பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய ஆர்.ஷிராந்தி என்ற யுவதியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ் யுவதியின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் கத்தியுடன் சென்ற 26 வயதுடைய இளைஞர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரைச் சராமரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
முன்னாள் காதலனான சந்தேகநபரைக் கைது செய்வதற்கான விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையின் உறுதிப்படுத்தப்பட்ட உண்மைச் செய்தி வழங்குனரான நாழிகையுடன் இணைந்திருங்கள்.