உலகம்

மாதம் 2 கோடி ரூபா சம்பளம்: மாணவர் ஒருவருக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு!

Published

on

இந்திய மாணவன் ஒருவர் 50 இலட்சம் இந்திய ரூபா (இலங்கை ரூபாவில் சுமார் 2 கோடி ரூபா) சம்பளத்திற்குக் கூகுளின் வேலை வாய்ப்பை பெற்று, வளர்ந்துவரும் மாணவர்களுக்கு உதாரணமாக மாறியுள்ளார். 

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம்-புனே பகுதியைச் சேர்ந்த ஹர்ஷல் ஜூய்கர் (Harshal Juikar) என்னும் இளம் பட்டதாரி மாணவனுக்கே இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

புனே பகுதியில் வசிக்கும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஹர்ஷல் ஜூய்கர், அதே நகரத்தில் உள்ள எம்.ஐ.டி. வேர்ல்ட் பீஸ் பல்கலைக்கழகத்தில் (MIT World Peace University) எம்.எஸ்.சி. பிளாக்செயின் டெக்னாலஜி (M.Sc in Blockchain Technology) படிப்பை முடித்துள்ளார். 

பல்கலைக்கழக நேர்முகத் பரீட்சை

படிக்கும்போதே, இவரது அதீத திறமையால், கூகுள் நிறுவனத்தில் ஜூனியர் டேட்டா சயின்டிஸ்ட் (Junior Data Scientist) இன்டர்ன்ஷிப்புக்கு தெரிவாகியுள்ளார்.

இதையடுத்து, 1.5 ஆண்டுகள் பயிற்சியாளராக பணிபுரிந்துள்ளார். அந்த நேரத்தில் இவரது திறமையும், தொழில்நுட்பம் மீதான அவரது ஆர்வமும் அவருக்குக் கூகுள் நிறுவனத்துடைய நன்மதிப்பை பெற்றுக் கொடுத்துள்ளது.

அதன்பின் படிப்பை முடித்த அவருக்கு எம்.ஐ.டி. வேர்ல்ட் பீஸ் பல்கலைக்கழகத்தில் கூகுள் நிறுவனம் நடத்திய பல்கலைக்கழக நேர்முகத் பரீட்சையில் கலந்துகொள்ளும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட ஹர்ஷல் ஜூய்கர், அந்த நிறுவனத்தின் டேட்டா சயின்டிஸ்ட் பணியிடத்தைத் தட்டிச் சென்றுள்ளார். 

வாழ்த்துகளும், பாராட்டுகளும்

இது தொடர்பில் ஹர்ஷல் ஜூய்கர் கூறியுள்ளதாவது, அது, எனக்குக் கற்பனைக்கும் அப்பாற்பட்ட வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளது.

இந்தப் பயணம் முழுவதும் எனக்கு ஆதரவு அளித்த எம்.ஐ.டி. வேர்ல்ட் பீஸ் பல்கலைக்கழகத்துக்கு, நான் மிகுந்த நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

இவர்களின் உதவி இல்லாமல், இந்த குறிப்பிடத்தக்கச் சாதனை சாத்தியமாகியிருக்காது” எனத் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் படித்த பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ரவிக்குமார் சிட்னிஸ் கூறுகையில், “ஹர்ஷலின் சாதனைக்காக நாங்கள் மிகவும் பெருமிதம் கொள்கிறோம். 

அவரது, இந்த வெற்றியானது, எங்களது கல்வி நிறுவத்தின் அர்ப்பணிப்பின் பிரதிபலிப்பாகும். அதே நேரத்தில், படித்து வரும் மாணவர்களுக்குத் தனிப்பட்ட திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கும், புதுமையான கலாச்சாரத்தில் நுழைவதற்கும் இந்த வெற்றி உத்வேகமாக அமைந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார். 

ஹர்ஷல் ஜூய்கருக்கு பல தரப்பில் இருந்து வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகிறது. 

இலங்கையின் உறுதிப்படுத்தப்பட்ட உண்மைச் செய்தி வழங்குனரான நாழிகையுடன் இணைந்திருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version