உள்ளூர்

தாலியுடன் பாடசாலைக்கு சென்ற ஆசிரியைக்கு சக ஆசிரியையால் நேர்ந்த கொடூரம்!

Published

on

புத்தளம் மாவட்டம் – உடப்புவில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியை ஒருவரின் 22 இலட்சம் ரூபா பெறுமதியான தாலி கொடி திருடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் அதே பாடசாலையை சேர்ந்த ஆசிரியை ஒருவரை இன்றைய தினம் (28-07-2023) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தாலி கொடியின் உரிமையாளரான ஆசிரியையின் கழுத்தில் அரிப்பு ஏற்பட்டதால், தாலி கொடியை கழற்றி கைப்பையில் போட்டுக் கொண்டு பாடம் நடத்தத் ஆரம்பித்துள்ளார்.

அதன்போது, ​​அதிபரின் அழைப்பின் பேரில் வகுப்பறையை விட்டு வெளியேறிய அவர், பின்னர் திரும்பி வந்து, தனது கைப்பையில் இருந்த தாலி கொடியை பார்த்த போது, அது இல்லாததால் அதிபரிடம் முறையிட்டுள்ளார்.

பின்னர், அதிபர் வந்து மாணவர்களிடம் விசாரித்ததில், மற்றொரு ஆசிரியை அவரது கைப்பையை திறந்து பார்த்தது தெரியவந்தது.

பின்னர் சம்பவம் தொடர்பில் அதிபர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து பொலிஸார் வந்து சந்தேகநபரான ஆசிரியையிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தியதில் தாலி கொடியை திருடியதை ஒப்புக்கொண்டார்.

பின்னர் திருடிய நகையை பாடசாலையின் பாதுகாப்பு வேலிக்கு அருகில் சிறிய குழி தோண்டி புதைத்து மறைத்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, சந்தேகத்திற்குரிய ஆசிரியரை பொலிஸார் கைது செய்து புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version