உள்ளூர்
யாழில் உயிரிழந்த குழந்தையின் சடலத்துடன் பல மணிநேரம் தவித்த தாய்: கொந்தளித்த அரசியல்வாதி!
யாழ்ப்பாண பகுதியில் தாய் பால் புரைக்கேறி பரிதாபமாக உயிரிழந்த குழந்தையின் சடலத்துடன் தாயார் அலைக்கழிக்கப்பட்ட சம்பவத்தை வண்மையாக கண்டிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (24-07-2023) யாழ் நெடுந்தீவு,13-ம் வட்டாரத்தை சேர்ந்த 9 மாதங்களேயான பச்சிளம் குழந்தை ஒன்று தாய் பால் அருந்திய நிலையில் பால் புரைக்கேறி பரிதாபமாக உயிரிழந்தது.
குறித்த உயிரிழந்த குழந்தையின் சடலத்துடன் நோயாளர் காவு வண்டியில் வந்த இளம் தாயை பல மணி நேரம் நோயாளர் காவு வண்டியில் யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகம் காக்க வைத்திருந்ததாக சம்பவம் பேசுபொருளாக மாறியுள்ளது.
அங்கஜன் இராமநாதன் கண்டிப்பு!
இந்த நிலையில் குறித்த செய்தியை தனது முகநூல் பதிவில் இட்டு அதன் கீழ் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களை வன்மையாக கண்டிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் பதிவிட்டுள்ளார்.
குழந்தையின் உடலத்தோடு நெடுந்தீவிலிருந்து யாழ்ப்பாணம் விரை பயணித்த அந்த தாய் பட்ட வேதனையை என்னால் உணரமுடிகிறது.
இந்த அலைச்சல்களுக்கு காரணமானவர்களை வன்மையாக கண்டிக்கின்றேன்.’ என அவர் தனது உத்தியோபூர்வ முகநூல் பத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.
இலங்கையின் உறுதிப்படுத்தப்பட்ட உண்மைச் செய்தி வழங்குனரான நாழிகையுடன் இணைந்திருங்கள்.