உலகம்
பிடிக்காத திருமணம்; தங்கையின் தலையுடன் பொலிஸ் நிலையம் சென்ற சகோதனால் அதிர்ச்சி!
மாற்று மத இளைஞரை காதலித்த தங்கையின் தலையை வெட்டிய அண்ணன், தலையுடன் பொலிஸ் நிலையம் சென்ற சம்பவமொன்று இந்தியாவில் பதிவாகியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டம் மித்வாரா கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஆசிபா (வயது 18). இவரது சகோதரர் ரியாஸ் (வயது 22).
வேறு மத வாலிபருடன் காதல்
இந்நிலையில் , ஆசிபாவும் அதே கிராமத்தை சேர்ந்த சந்த் பாபு என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர்.
காதலர்கள் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறியதையடுத்து, ஆசிபாவின் குடும்பத்தினர் பொலிசில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட பொலிசார் ஆசிபாவையும் அவரது காதலன் சந்த் பாபுவையும் கண்டுபிடித்தனர்.
ஆசிபாவை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்த பொலிசார் சந்த் பாபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மாற்று மதத்தை சேர்ந்த நபரை காதலித்து அவருடன் வீட்டை விட்டு வெளியேறியது தொடர்பாக ஆசிபாவுக்கு அவரது அண்ணன் ரியாசுக்கும் இடையே நேற்று கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
தங்கையின் தலையை துண்டித்த அண்ணன்
வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ரியாஸ் வீட்டில் இருந்த கூர்மையான ஆயுதத்தால் தங்கை ஆசிபாவின் தலையை வெட்டியுள்ளார்.