உள்ளூர்

வெளிநாடுகளில் பணத்தை பதுக்கியோருக்கு ஆப்பு வைக்கும் அரசாங்கம்!

Published

on

நாட்டில் தவறான வழியில் சம்பாதித்து வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் இலங்கையர்களின் கறுப்புப் பணத்தைக் கைப்பற்றுவதற்கு அரசு தீர்மானித்துள்ளது.

அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் வர்த்தகர்கள் ஆகியோரால் தவறான வழியில் சம்பாதிக்கப்பட்ட ஒரு பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பணம் மற்றும் சொத்துக்கள் வெளிநாடுகளில் இருக்கின்றதாக கூறப்படுகின்றது.

 அரசுடமையாக்குவதற்காகப் புதிய சட்டம்

இந்நிலையில் அவற்றை மீண்டும் நாட்டுக்குக் கொண்டு வந்து அரசுடமையாக்குவதற்காகப் புதிய சட்டம் ஒன்றைத் தயாரிப்பதற்கு அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போதைப்பொருள் வர்த்தகம் மூலம் சம்பாதிக்கப்பட்ட அதிகமான சொத்துக்கள் டுபாய் உள்ளிட்ட நாடுகளில் உள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவற்றைப் புதிய சட்டம் மூலம் இலங்கைக்குக் கொண்டுவர முடியும் என்றும் அரசாங்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version