உள்ளூர்
கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மீது நீர்த்தாரை பிரயோகம்!
கொழும்பு – லிப்டன் சுற்றுவட்டப் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் சம்மேளனத்தின் ஆர்ப்பாட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாலி, சமஸ்கிருதம், பௌத்த தத்துவம் மற்றும் ஆய்வு உள்ளிட்ட பாடங்களை நிறுத்துவதை தவிர்துக்கொள்ளுமாறும், பேராதெனியா, களனி மற்றும் ஏனைய பல்கலைக்கழகங்களுக்கு மாணவர் இணைப்பை விரிவுபடுத்துமாறும் கோரி குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
குறித்த ஆர்பாட்டம் உயர்கல்வி அமைச்சுக்கு செல்லும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் ஆர்ப்பாட்டக்காரர்களை முன்னோக்கி செல்லவிடாது அப்பகுதியில் பெருந்திரளான பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.