உள்ளூர்
தந்தையும் மகனும் விபத்தில் பலி; பெரும்சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!
அனுராதபுரத்தில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் தந்தையும் மகனும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அனுராதபுரம் – மதவாச்சி பிரதேசத்தில் நேற்று (19.07.2023) இரவு 08 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்கள் திருகோணமலையை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீதியை விட்டு விலகி விபத்து
உயிரிழந்த இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற ஏ.சில்வெஸ்டர் என்ற 22 வயதுடைய மகன் சம்பவ இடத்திலும், வி.அன்ரனிதாஸ் என்ற 48 வயதுடைய தந்தை வைத்தியசாலையிலும் உயிரிழந்துள்ளனர்.
விபத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.