உள்ளூர்
பெண் ஒருவர் நடத்திய சூதாட்ட விடுதி; 15 பேர் கைது!
அங்கொடயில் சொகுசு வீடொன்றில் பெண் ஒருவரால் சூதாட்ட விடுதி ஒன்று நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கொட, தெல்கஹாவத்தையில் உள்ள சொகுசு வீடொன்றிலேயே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர்கள்
இதில் 100,000 ரூபா பணத்துடன் 15 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தெல்கஹாவத்தையில் உள்ள இரண்டு மாடி வீடொன்றில் உள்ள குறித்த பெண் பல வருடங்களாக இந்த சூதாட்ட விடுதியை முக்கிய பிரமுகர்களின் உதவியுடன் நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முல்லேரியா பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த நால்வர் மாறுவேடத்தில் குறித்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன் அவர்களிடமிருந்து கிடைத்த தகவலின்படி 20 பேர் கொண்ட பொலிஸ் குழு ஒரே நேரத்தில் வீட்டைச் சுற்றி வளைத்து சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.