உள்ளூர்

பேருந்து தரிப்பிடத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு!

Published

on

ஹட்டன் பேருந்து தரிப்பிடத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹட்டன்– கொழும்பு பிரதான வீதியில் ஹட்டன் மல்லியப்புவ பகுதியிலேயே இன்று (16) காலை இச் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சடலம்

பேருந்து நிலையத்தினுள் ஒருவர் காயங்களுடன் தரையில் கிடப்பதாக பயணி ஒருவர் ஹட்டன் பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபர் நேற்று (15) பிற்பகல் முதல் அப்பகுதியில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version