உலகம்

பிரமிக்கவைக்கும் AI டிவி செய்தி வாசிப்பாளர் லிசா; சீனாவை தொடர்ந்து இந்தியா சாதனை

Published

on

தற்போதைய வின்ஞான உலகில் அறிவியல் தொழில் நுட்பங்கள் ஆச்சர்யமூட்டும் வகையில் வளர்ச்சி கண்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக கம்ப்யூட்டர் சார்ந்த தொழில் நுட்பங்களின் வளர்ச்சி பிரமாண்டமானவையாக உள்ளன.

அந்தவகையில் சீனாவை தொடர்ந்து இந்தியாவிலும் பிராந்திய மொழியில் AI தொழில் நுட்பத்தில் செய்தி வாசிப்பாளர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்.

AI லிசா

ஒடிசாவில் உள்ள ஓ டிவி, தனது முதல் செயற்கை நுண்ணறிவு AI டிவி செய்தி வாசிப்பாளர் லிசா எனும் வாசிப்பாளரை உருவாக்கியுள்ளது.

செயற்கை நுண்ணறிவு எனப்படும் Artificial intelligence (AI) தொழில் நுட்பத்தில் பல புதுமைகள் படைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் AI லிசாவை பார்க்க அசல் செய்தி வாசிப்பாளர் போலவே உள்ளது.

ஒடிசா மாநிலத்தின் பாரம்பரிய கைத்தறி சேலையை கட்டிக்கொண்டு ஒடியா மற்றும் ஆங்கில மொழியில் செய்தி வாசிக்கும் வகையில் லிசா புரோகிராம் செய்யப்பட்டுள்ளது. இது காட்சி ஊடகத்தில் முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதேசமயம் பல மொழிகளில் செய்தி வாசிக்கும் திறன் லிசாவுக்கு உள்ளதாம்.

அதேவேளை சீனாவில் உள்ள செய்தி நிறுவனம் ஒன்று, AI தொழில்நுட்பம் மூலம் முதல்முறையாக செய்தி வாசிப்பாளரை அறிமுகம் செய்தது. உருவம், முக பாவனை, உதட்டு அசைவுகள் அச்சுஅசலாக மனிதர்களைப் போலவே இருக்கும்.

குரலை மட்டும் பதிவு செய்து அமைத்துக் கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவிலும் பிராந்திய மொழியில் AI தொழில் நுட்பத்தில் செய்தி வாசிப்பாளர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version