உள்ளூர்
இலங்கையை உலுக்கிய கோர விபத்து – 3 வருடங்களுக்கு முன்னரே எச்சரிக்கை!
பொலநறுவையில் நேற்றிரவு நடந்த கோர விபத்து குறித்து மூன்று வருடங்களுக்கு முன்னரே எச்சரிக்கப்பட்டுள்ளது.
மனம்பிட்டி விபத்தில் சச்சின் பஸ்லில் கிடத்தட்ட 50 பேர் பயணத்திருக்கின்றார்கள், 10 பேர் அளவில் இறந்திருக்கின்றார்கள்.
அதிவேகமாக பயணித்த பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனியார் பேருந்துகளின் வேகம் நல்லதல்ல என்பதை பல முறை கூறிவிட்டாயிற்று ஆனால் யாரும் அதில் கரிசனை காட்டுவதாக இல்லை. 2020இல் ஒரு நண்பர் இந்த பஸ்சைப் பற்றிய விசனத்தையும், எதிர்காலம் தொடர்பான அச்சத்தையும் தெளிவாக பதிவு செய்துள்ளார்.
இப்படியான இழப்புகள் இனியும் தொடராமல் இருக்கு வேக கட்டுப்பாட்டை இவர்கள் கடைப்பிடிக்க வேண்டும் , உரிய அதிகாரிகள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.