உலகம்
கைலாசாவின் பிரதமராக நடிகை ரஞ்சிதா; அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள்!
சர்ச்சைக்குரிய நபரான நித்யானந்தாவால் உருவாக்கப்பட்ட கைலாசா நாட்டின் பிரதமராக ரஞ்சிதா பதவி வகிப்பதாக சமூகவலைத்தளங்களில் தற்போது பதிவொன்று வைரலாகி வருகின்றது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
நித்யானந்தா இந்தியாவை விட்டு தலைமறைவாக வெளிநாடு தப்பி ஓடியதோடு, கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இவ்வாறான நிலையில் நித்தியானந்தாவால் உருவாக்கப்பட்ட கைலாசா நாட்டிற்கென தனி கடவுச்சீட்டு, ரூபாய் நாணயங்கள், தனிக்கொடி உள்ளிட்டவற்றை அறிவித்தார்.
மேலும் அவர் வர்த்தக ரீதியில் பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தங்களை செய்தவதாக கூறி அந்த நாட்டு பிரதிநிதிகளுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவது போன்ற புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தது.
அதேவேளை சமூக வலைத்தளங்களினூடாக இடையிடையே தோன்றும் நித்தியானந்தா அதனூடாக சொற்பொழிவுகளை நிகழ்த்தி வருகின்றார்.
மேலும், கைலாசா சார்பில் பெண் பிரதிநிதிகள் ஐ.நா.சபை மாநாட்டில் பங்கேற்று பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இவ்வாறான நிலையில் சில நாட்களுக்கு முன்னர் லிங்க்டு இன் பக்கத்தில் ரஞ்சிதாவின் புகைப்படம் நித்யானந்தா மாயி சுவாமி என்ற தலைப்பில் இருந்தது. அதற்கு கீழே கைலாசாவின் பிரதமர் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தற்போது இணையத்தில் வைரலாக வருவதுடன் கைலாசாவின் பிரதமர் பதவி தொடர்பிலும் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றது.
இலங்கையின் உறுதிப்படுத்தப்பட்ட உண்மைச் செய்தி வழங்குனரான நாழிகையுடன் இணைந்திருங்கள்.