உள்ளூர்

யாழில் காணியில் குழி தோண்டியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Published

on

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் அமைந்துள்ள காணி ஒன்றிலிருந்து நான்கு துப்பாக்கிகள் மற்றும் அவற்றுக்குரிய தோட்டாக்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உயரப்புலம் அடைக்கலநாயகி தெருவில் உள்ள காணி ஒன்றில் , நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை குழி ஒன்றினை தோண்டிய போதே ஆயுதங்கள் காணப்பட்டுள்ளன.

 ரி 56 ரக துப்பாக்கிகள் மகசீன்கள் மீட்பு

அதனை அடுத்து, மானிப்பாய் பொலிஸாருக்கு காணி உரிமையாளர் அறிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் குழியினை மேலும் தோண்டி ஆயுதங்களை மீட்டனர்.

இதன் போது குழிக்குள் இருந்து ரி 56 ரக துப்பாக்கிகள் நான்கும், அவற்றுக்கு உரிய ரவைக்கூடுகள் (மகசீன்கள்) மற்றும் ஒரு தொகை ரவைகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

எனினும் மீட்கப்பட்ட ஆயுதங்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு , துருப்பிடித்த நிலையில் காணப்படுவதாக தெரிவித்த பொலிஸார், அது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  

இலங்கையின் உறுதிப்படுத்தப்பட்ட உண்மைச் செய்தி வழங்குனரான நாழிகையுடன் இணைந்திருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version