உள்ளூர்
சுழன்றடித்த காற்று; தூக்கி வீசப்பட்ட நகரசபை கடைத் தொகுதி! (Photos)
அசாதாரண காலநிலை காரணமாக பலத்த காற்று வீசியதினால் புத்தளம் நகரசபை கடைத் தொகுதியின் கூரைத் தகடுகள் தூக்கி எறியப்பட்டு அள்ளுண்டு சென்றுள்ளன.
புத்தளம் மாவட்டத்தில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படுவதினால் மக்கள் பாதுகாப்பாக செயற்படுமாறு புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பலத்த காற்று வீசியதினால் புத்தளம் நகரசபைக் கடைத் தொகுதியின் இரண்டு கடைகளின் கூரைத் தகடுகள் காற்றால் அள்ளுண்டு சென்றுள்ளன.
இந்நிலையில் புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் புத்தளம் நகரசபை ஊழியர்கள் இணைந்து திருத்தப்பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இலங்கையின் உறுதிப்படுத்தப்பட்ட உண்மைச் செய்தி வழங்குனரான நாழிகையுடன் இணைந்திருங்கள்.