உள்ளூர்

கடமை நேரத்தில் அலங்கோலமாக திரியும் பொலிஸார்; தமிழர் பகுதியில் சேவை பெறச் சென்றவர்கள் விசனம்!

Published

on

மாங்குளம்-  முறிகண்டி பொலிஸ் காவலரண் பொதுமக்கள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுவதில்லை எனவும், சேவையை பெற்றுக் கொள்ள செல்லும் சந்தர்ப்பங்களில், கண்னியம்ற்று அநாகரீகமான அறைகுறை ஆடைகளுடன் அங்குள்ள பொலிஸ் உத்த்யோகஸ்தர்கள் நடமாடுவதாகவும் பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த உத்தியோகத்தர்களை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்து, பொதுமக்களிற்கு சேவை செய்யக் கூடிய உத்தியோகத்தர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேவை பெறச்செல்லும் மக்கள் இழுத்தடிப்பு

மாங்குளம் தலைமை பொலிஸ் நிலையத்தின் கீழ் மக்களின் பாதுகாப்பு சேவையை உறுதி செய்வதற்காகவும், இலகு படுத்தலிற்காகவும் முறிகண்டியில் பொலிஸ் காவலரண் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த காவலரணில் மக்கள் முறைப்பாடுகள் செய்வதில் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக கூறப்படுகின்றது. இன்றைய தினம் (04) பிற்பகல் 2 மணியளவில் ஒருவர் சேவை பெறுவதற்கான சென்ற பொழுது காவலரணில் எவரும் இருந்திருக்கவில்லை.

இது தொடர்பில் கிளிநொச்சி ,முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அதோடு காவலரணில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் முறையற்ற உடையில் சாரத்துடன் இருந்ததுடன், தமிழ் உத்தியோகத்தர் ஒருவர் நீராடிவிட்டு மாற்று உடையில் இருந்துள்ளார்.

பிரதி பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு

சேவைக்கு சென்ற நபர் சேவையை பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் அங்கு வந்த தமிழ் உத்தியோகத்தரிடம் வினவிய போது, கடமையில் யாரும் இல்லை, தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை நாடுமாறும் கூறியுள்ளார்.

இதனையடுத்து காவலரணுக்கு பொறுப்பான அதிகாரியை சந்திக்க கோரிய போது அவ்வாறு எவரும் இல்லை எனவும், மாங்குளம் தலைமை பொலிஸ் நிலையத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பிரதி பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து பிரதி பொலிஸ்மா அதிப காவலரணுக்க பொறுப்பான அதிகாரியை தொடர்பு கொண்டு விடயங்களை கேட்டறிந்ததுடன், சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பொது மக்களிற்கு சேவை வழங்க முடியாத முறிகண்டி காவலரண் தேவையற்ற ஒன்று என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.    

இலங்கையின் உறுதிப்படுத்தப்பட்ட உண்மைச் செய்தி வழங்குனரான நாழிகையுடன் இணைந்திருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version