உள்ளூர்
திடீரென சரிந்து வீழ்ந்த தொலைத்தொடர்பு கோபுரம்; அலுவகத்தில் இருந்த ஐவருக்கு நேர்ந்த கதி!
திருகோணமலை- கந்தளாய் நகரில் இன்று (04) பிற்பகல் வீசிய பலத்த காற்றினால் நகரின் மத்தியில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரம் அருகில் உள்ள தபால் நிலையத்தின் கூரை மீது விழுந்ததில் 5 பேர் காயமடைந்துள்லனர்.
காயமடைந்தவர்கள் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஜி.பால் ரோஷன் தெரிவித்துள்ளார்.
10 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோபுரம்
தகவல் தொடர்பு கோபுரம் கூரை மீது விழுந்ததில் தபால் நிலையத்தின் மேற்கூரை பலத்த சேதமடைந்துள்ளது. காயமடைந்த ஐந்து பேரும் தபால் நிலைய ஊழியர்கள் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை இந்த டெலிகாம் வளாகத்தில் இரண்டு தகவல் தொடர்பு கோபுரங்கள் உள்ளன.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மிக உயரமான கோபுரம் பலத்த காற்றினால் தபால் நிலையத்தின் மேற்கூரையில் விழுந்துள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் உறுதிப்படுத்தப்பட்ட உண்மைச் செய்தி வழங்குனரான நாழிகையுடன் இணைந்திருங்கள்.