உள்ளூர்

கொழும்பில் பாடசாலை மாணவி ஒருவர் தொடர்ச்சியாக வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட கொடுரம்!

Published

on

பாடசாலை மாணவி ஒருவரை தொடர்ச்சியாக வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இது தொடர்பில் 21 வயதுடைய இளைஞனை கைது செய்வதற்கான விசாரணைகளை பிபில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் மாணவி பலமுறை வன்புணர்வுக்கு உற்படுத்தப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 14 வயதுடைய மாணவி தனது பாடசாலை தோழியின் சகோதரனுடன் காதல் உறவில் இருந்துள்ளார்.

விசாரணைகள் மூலம் தெரியவந்தவை

கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 22ம் திகதி தனது தோழியின் வீட்டிற்கு சென்றதாகவும் இதன் போது மாணவியின் காதலனால் வன்புணர்வுக்கு உற்படுத்தப்பட்டதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

பல சந்தர்ப்பங்களில் மாணவியின் காதலனால் வன்புணர்வக்கு உற்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தற்போது கொழும்பு பகுதிக்கு தொழிலுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் உறுதிப்படுத்தப்பட்ட உண்மைச் செய்தி வழங்குனரான நாழிகையுடன் இணைந்திருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version