உள்ளூர்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைப்பு; ஆட்சேபனைகள் நிராகரிப்பு!

Published

on

2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமை மனுக்களை நிராகரிக்குமாறு கோரி தாக்கல் செய்த பூர்வாங்க ஆட்சேபனைகள் இன்று செவ்வாய்க்கிழமை (27) உயர்நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டன.

சட்ட மா அதிபர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல்

2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுவது பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும் என்பதை உறுதிப்படுத்துமாறு நீதிமன்ற உத்தரவை கோரி இரண்டு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

புவனேக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட, முர்து பெர்னாண்டோ மற்றும் காமினி அமரசேகர ஆகிய ஐவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதேவேளை தேசிய மக்கள் சக்தி மற்றும் பெப்ரல் என்பனவும் இது தொடர்பில் இரண்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.

இலங்கையின் உறுதிப்படுத்தப்பட்ட உண்மைச் செய்தி வழங்குனரான நாழிகையுடன் இணைந்திருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version