உள்ளூர்

பணம் வசூலித்து மேலதிக வகுப்புகளை நடத்தத் தடை!

Published

on

 மத்திய மாகாணத்தில் மாணவர்களிடம் பணம் வசூலித்து ஆசிரியர்கள் மேலதிக வகுப்புகளை நடத்துவதைத் தடை செய்து மத்திய மாகாண கல்விச் செயலாளர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதேசமயம் நல்ல எண்ணத்துடன் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு, பணம் வசூலிக்காமல், மேலதிக வகுப்புகள் கற்பதற்கு, எவ்வித தடையும் இல்லை எனவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒழுக்காற்று நடவடிக்கை

இந்த சுற்றறிக்கை மத்திய மாகாண ஆளுநர் லலித் யு. கமகே அவர்களின் ஆலோசனைக்கு அமைய வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய மாகாணத்தில் சமத்துவமான பாடசாலைக் கல்வியை நிறுவும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சுற்றறிக்கையை மீறும் ஆசிரியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மத்திய மாகாண கல்வி செயலாளர் யு.பி. ஹேரத் தெரிவித்தார்.

இலங்கையின் உறுதிப்படுத்தப்பட்ட உண்மைச் செய்தி வழங்குனரான நாழிகையுடன் இணைந்திருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version