உள்ளூர்

11ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம்; நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

Published

on

கொழும்பில் உள்ள பிரபல மகளிர் கல்லூரி ஒன்றில் கல்வி கற்கும் 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர் 8 தடவைகள் பாரிய வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்நிலையில் சிறுமியின் உடலின் சில பாகங்கள் சிகரெட்டினால் சுடப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கண்டறிய விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் நேற்று நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

இச்சம்பவம் இவ்வருட புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவிக்கே நேர்ந்துள்ளது. இந்நிலையில் குறித்த சிறுமியை லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை அளிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுமி தொடர்பில் வெல்லம்பிட்டிய பொலிஸாரால் பெறப்பட்ட சட்ட வைத்திய அறிக்கைகள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன. மருத்துவ அறிக்கைகளை கருத்தில் கொண்டு, சிறுமியை அவரது தாயின் பராமரிப்பில் மருத்துவமனையில் அனுமதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இலங்கையின் உறுதிப்படுத்தப்பட்ட உண்மைச் செய்தி வழங்குனரான நாழிகையுடன் இணைந்திருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version