உலகம்

இலங்கைப் பெண்ணை அடக்கம் செய்ய மறுத்த இந்தியர்கள்!

Published

on

இலங்கை தமிழ் அகதியொருவர் இந்தோனோசியாவில் நோயினால் உயிரிழந்த நிலையில் அவரது உடலை தங்கள் உடல்கள் அடக்கம் செய்யப்படும் பகுதியில் அடக்கம் செய்ய அங்கு வாழும் இந்தியர்கள் மறுத்துள்ளமை குறித்து சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 கடந்த 2012ம் ஆண்டு இந்தோனேசியாவில் தஞ்சமடைந்து மெடான் நகரின் பெலாவான் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் ஏதிலியான அசோக்குமார் லலிதா நோயுற்று தகுந்த  சிகிற்சையின்றி உயிரிழந்ததாக  கூறப்படுகின்றது.

இந்தோனேசியாவில் இந்தியப் பின்னணி கொண்ட பல்லாயிரக்கணக்கானவர்கள்   வாழ்கிறார்கள்.

எனினும் உயிரிழந்த இலங்கைப்பெண்ணின்  உடலை அவர்களின் தகனம் செய்யும் இடத்திலே அடக்கம் செய்வதற்கு அங்குள்ள இலங்கை தமிழ் உறவுகள் அணுகிய போது தகனம் செய்ய முடியாது என அவர்கள் மறுத்துவிட்தாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் மனைவியின் உடலோடு  தவித்த  கணவருக்கு   அங்குவாழும் பஞ்சாப்பைச் சேர்ந்த சீக்கியர் ஒருவர்  மனித நேயத்தோடு  தங்களது  மயானத்தில் உடலைத் தகனம் செய்வதற்கு  அனுமதி வழகியதை அடுத்து இலங்கைப்பெண்ணின் உடல் தகனம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

சொந்த நாட்டைவிட்டு வெளியேறி  பிறிதொரு நாட்டில் அடைக்கலம் புகுந்த  இரு  பிள்ளைகளின்  தாயான  இளம்இலங்கை தமிழ் பெண் உயிரிழந்த  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் உறுதிப்படுத்தப்பட்ட உண்மைச் செய்தி வழங்குனரான நாழிகையுடன் இணைந்திருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version