உலகம்
ரயிலில் இளம்பெண் செய்த சாகசம்! எமனிடம் சென்று திரும்பி வந்த திக் திக் காட்சி!
பொதுவாக இளைஞர்கள் ரயிலில் தொங்கிக்கொண்டு பயணிக்கும் நிலையில், இங்கு பெண் ஒருவர் அவ்வாறு பயணித்து மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.
இன்று பெரும்பாலான இளைஞர்கள் ரயில் பயணத்தின் போது, பல சாகசங்களை செய்கின்றனர். இது ஒரு ஆபத்தான நிகழ்வு என்றாலும் அதனை பொருட்படுத்தாமல், மற்றவர்கள் முன்பு சீன் போடுகின்றனர்.
இங்கு இளம் பெண் ஒருவர் ரயில் ஒன்றில் தொற்றிக் கொண்டு பயணித்த நிலையில், திடீரென மின்கம்பம் ஒன்று இடையில் வரவே நொடியில் சுதாரித்துக் கொண்ட சிறுமி மயிரிழையில் தன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டுள்ளார்.
குறித்த காட்சி சற்று அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் விதமாக இருந்தாலும், இக்காட்சி எச்சரிக்கை ஏற்படுத்தும் காட்சியாகவும் இருக்கின்றது. இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் இம்மாதிரியான பயணத்தின் போது, சாகசம் செய்வதை இனிமேல் செய்யாமல் இருக்க வேண்டும்.
இலங்கையின் உறுதிப்படுத்தப்பட்ட உண்மைச் செய்தி வழங்குனரான நாழிகையுடன் இணைந்திருங்கள்.