ஆரோக்கியம்
இரவு படுக்கைக்கு சென்றால் துளி கூட தூக்கமில்லையா?
நம்மில் சிலருக்கு இரவு நேரங்களில் தூக்கம் சரியாக வராது. இந்த பழக்கம் பலவிதமான சிக்கல்களை ஏற்படுத்தும் என மருத்துவ ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
இந்த கலியுகத்தில் வாழ வேண்டும் என்றால் நமமுடைய பழக்கவழக்கங்களை கூட மாற்றிக் கொள்ள வேண்டும்.
வேலைகள் எல்லாம் முடித்து விட்டு இரவு வெகு நேரம் விழித்திருந்து டிவி சீரியல்கள் பார்ப்பதை வழக்கமாக கொண்டிருப்பார்.
இவ்வாறு தூங்காமல் கேம் விளையாடுதல், கதை பார்த்தல், படம் பார்த்தல், தொலைபேசி பாவனை, கோல் கதைத்தல் ஆகிய பழக்கங்கள் காலப்போக்கில் பாரிய பிரச்சினைகளுக்கு உங்களை ஆளாக்கும்.
தூக்கமில்லையா
அந்த வகையில் இரவு நீண்ட நேரம் தூங்காமல் இருந்தால் என்ன நடக்கும் என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
1.“Evening people” என்று அழைக்கப்படும் தாமதமாக தூங்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு இதய நோய், நீரிழிவு நோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது.
2. நேரம் சென்ற பின் தூங்குதல் மற்றும் மது அருந்துதல் பழக்கம் இருந்தால் சில நேரங்களில் உயிரிழப்பு கூட ஏற்படலாம்.
3. இவ்வாறு தூங்காமல் இருந்தால் அவர்களின் உடல் ஓய்வு இல்லாமல் மயக்க நிலைக்கு கூட கொண்டு செல்லும்.
4. காலையில் அதிகாலையில் எழும்ப வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால் அவர்களால் செய்ய வேண்டிய வேலைகளை சரி வர செய்ய முடியாது.
இலங்கையின் உறுதிப்படுத்தப்பட்ட உண்மைச் செய்தி வழங்குனரான நாழிகையுடன் இணைந்திருங்கள்.