உள்ளூர்
இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
நாட்டில் இதயநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதய நோய் தொடர்பான நிபுணர் வைத்தியர் அனிது பத்திரன தெரிவித்துள்ளார்.
அதன்படி நாட்டில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு இதய நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வழிவகுத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிகரிக்கும் இதய நோயாளிகளின் எண்ணிக்கை
இந்த நிலைமை குறித்து மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என வைத்தியர் மேலும் வலியுறுத்தினார்.
இதேவேளை, மக்கள் வெளியில் செல்லும்போது கூடுமானவரை முகக்கவசங்களை அணிந்து கொள்வது சிறந்தது.
காற்று மாசுபாடு இதய நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை மாத்திரமல்ல, உயர் இரத்த அழுத்தம், கொழுப்பு, நீரிழிவு, புற்றுநோய் மற்றும் நீண்டகால நுரையீரல் நோய்கள் போன்ற தொற்றாத நோய்களையும் அதிகரிக்கிறது என வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் உறுதிப்படுத்தப்பட்ட உண்மைச் செய்தி வழங்குனரான நாழிகையுடன் இணைந்திருங்கள்.