சினிமா
விஜய்- சங்கீதா விவாகரத்து சர்ச்சை: மொத்தமாக முற்றுப்புள்ளி வைத்த விஜய்
மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய விஜய் தன் குடும்ப பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசியிருக்கிறார்.
நடிகர் விஜய்தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர். விஜய்எப்போதும் ஆடம்பரம் இல்லாத எளிமையான வாழ்க்கையை வாழ்பவர்.
இந்நிலையில் தற்போது விஜய்குடும்பம் பற்றி அதிகம் பேசப்பட்டு வருகிறது. என்னதான் திரையில் பல ரசிகர்களைக் கொண்டு கொண்டாடி வந்தாலும் வீட்டில் எல்லோருக்கும் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கிறது.
அவ்வாறு தான் நடிகர் விஜய்யிக்கும் அவரது தந்தைக்கும் பல பிரச்சினைகள் இருந்தது என சமூக வலைத்தளங்களில் பல தகவல்கள் பரவி வந்தது.
விஜய் சங்கீதா விவாகரத்து
மேலும், விஜய்சங்கீதாவை விவாகரத்து செய்யப் போகிறார் என்ற செய்தியும் அதிகம் பரவி வந்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் விஜய்மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை கௌரவிக்கும் வகையில் ஊக்கத்தொகை வழங்கியிருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய், சமூக வலைத்தளங்களில் வரும் 75 சதவீதமான செய்திகள் எல்லாம் போலியானதாகத் தான் இருக்கிறது.
நான் மொத்தமாக சொல்லவில்லை, ஒரு சிலர் தங்களின் சுய நலத்திற்காக கவர்ச்சிக்காக தகவல்களை வெளியிடுகிறேன் என்று சொல்லி நிறைய போலியான தகவல்களை வெளியிடுகிறார்கள்.
இதன் மூலம் அவர் பல மறைமுகமான செய்திகளை வெளியிட்டிருக்கிறார். அதாவது தன் குடும்பத்தில் இருக்கும் விஜய்- சங்கீதா விவாகரத்து மற்றும்விஜய் தன் தந்தையோடு பிரச்சினை என பல பிரச்சினைகளை வைத்து அவதூறாக செய்திகளை பரப்புவதாக அவர் தனது ஆதங்கத்தை தெரிவித்திருக்கிறார்.
இலங்கையின் உறுதிப்படுத்தப்பட்ட உண்மைச் செய்தி வழங்குனரான நாழிகையுடன் இணைந்திருங்கள்.