உள்ளூர்

மருத்துவத் துறையில் கிளிநொச்சி மண்ணுக்கு பெருமை சேர்த்த மாணவி !

Published

on

கிளிநொச்சி மாவட்டத்திற்கும் தான் கற்ற பாடசாலைக்கும் பெருமை சேர்க்கும் விதமாக மருத்துவராகி சாதனை படைத்துள்ளார் ஹர்ஷி எனும் மாணவி.

 கடந்த யுத்த காலத்தின் பின்னர் மிகவும் விரும்பத்தகாத நினைவுகளைக் கொண்ட பாடசாலையாகக் கிளிநொச்சி கனிஷ்ட கல்லூரியானதுகாணப்பட்டது. 

எனினும் ,  2009 ஆண்டுக்குப் பின்னர் அந்தக் கல்லூரிக்கு நல்ல காலம் உதயமானது. பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் மிக மகிழ்ச்சியுடன் கல்வி கற்பதுடன் உயர் நிலை பதவிகளை அடைந்து வருகின்றனர்.

கிளிநொச்சி மாணவி சாதனை

இந்நிலையில், கிளிநொச்சி கனிஷ்ட கல்லூரியில் கல்வி கற்று மாணவி ஒருவர் அந்தப் பாடசாலையின் முதல் பெண் மருத்துவராக பதவி நிலையை அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சனிக்கிழமை (10) ஹர்ஷி என்ற  மாணவி, மருத்துவராகி தனது வைத்திய தொழிலை ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

குவியும் பாராட்டுக்கள்

போர்கால சூழ்நிலையால் பல இன்னல்களை   எமது மக்கள் தாயகத்தில் அனுபவித்திருப்பினும்,  எமது சந்ததிகள் இன்று  அந்த  கஸ்ரங்களையும் தாண்டி சாதனைகள் படைத்து எம்மினத்துக்கும் எமது  மண்ணுக்கும்  பெருமை சேர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த கனிஷ்ட கல்லூரி மாணவி  மருத்துவராகி சேவையினை ஆரம்பித்துள்ளமை  பலரும் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர். 

இலங்கையின் உறுதிப்படுத்தப்பட்ட உண்மைச் செய்தி வழங்குனரான நாழிகையுடன் இணைந்திருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version