உள்ளூர்
தாயுடன் சென்ற மகள் பரிதாப உயிரிழப்பு!
விபத்தில் தாயுடன் சென்ற பாடசாலை மாணவி ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக மாவத்தகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்து சம்பவம் குருநாகல், தலதாகம்மன – கெபிலிதிகொடவல விகாரைக்கு அருகில் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.
16 வயது பாடசாலை மாணவி
உயிரிழந்தவர் அத்தபத்துமுல பிரதேசத்தை சேர்ந்த ஹிமாயா கருணாரத்ன என்ற 16 வயதுடைய பாடசாலை மாணவி ஆவார்.
மாணவி தனது தாயாருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது மோட்டார் சைக்கிள் வீதியில் கவிழ்ந்த நிலையில் எதிரில் வந்த பஸ் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் தாய் மற்றும் மகள் ஆகிய இருவரும் காயமடைந்த நிலையில் குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் மகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதோடு தாய் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் விபத்து தொடர்பில் மாவத்தகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.