உள்ளூர்

வங்கிகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் அதிரடி நடவடிக்கை!

Published

on

ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் தொடர்பில் சிலர் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பன மிகவும் பாதுகாப்பானவை என தெரிவித்துள்ளார்.

எனவே உறுப்பினர்களின் நிலுவைகள் அப்படியே பாதுகாக்கப்படுமெனவும், அறிவிக்கப்பட்ட வட்டி வழங்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ருவன்வெல்ல – கோனகல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

இலங்கை ரூபாவின் நிலை

அத்துடன் இலங்கை ரூபாவின் நிலை தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போது, இலங்கை ரூபாவின் மதிப்பு மீள அதிகரிக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் மாதம் 15ஆம் திகதி முதல் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் அதிகரிக்கும்.

வழங்கல் மற்றும் தேவைக்கு ஏற்ப டொலரின் பெறுமதியை தீர்மானிக்க அரசாங்கம் அனுமதித்துள்ளது. சமீபகாலமாக ரூபாவின் மதிப்பில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கத்திற்கு முற்றிலும் டொலர் பரிவர்த்தனையே காரணம்.

கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்தவுடன், ரூபாவின் மதிப்பு மீள அதிகரிக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் இருந்து இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான தொடர்ச்சியான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றதாக குறிப்பிட்டுள்ளார். 

மேலும், வட்டி வீதங்களை குறைக்குமாறு அனைவரும் கோரிக்கை விடுக்கின்றனர். எனினும் இதுவரை வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டமைக்கான பயன்கள் வங்கிகள் மூலமாக மக்களை சென்றடைந்ததா என்பதை தான் மத்திய வங்கி தேடிப்பார்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

வாகன இறக்குமதி

இதேவேளை வாகனங்களை மீண்டும் எப்போது இறக்குமதி செய்ய முடியும் என்பது குறித்து தற்போதைக்கு உறுதியான அறிவிப்பை வெளியிட முடியாது என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் குறித்த சங்கத்தின் தலைவர் சம்பத் மெரெஞ்சி மேலும் கூறுகையில், வாகன இறக்குமதியின்போது நாட்டுக்கு பொருத்தமற்ற வாகனங்களை இறக்குமதி செய்ததன் பெருமளவிலான வெளிநாட்டு பணம் நாட்டை விட்டு வெளியேறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version