உள்ளூர்
சிறையில் பரீட்சை எழுதும் மகன்..! தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை!
இலங்கை இராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்ட எனது மகன் சிறைச்சாலைக்குள் இருப்பதற்கான ஆதாரங்கள் ஊடகங்கள் மூலம் இரண்டு தடவைகள் வெளிவந்த போதும் 17 ஆண்டுகள் கடந்தும் இதுவரையும் எனது மகனை பார்க்க முடியவில்லை என கவலை வெளியிட்ட தந்தை, தான் இறப்பதற்கு முன் தன் மகனை பார்க்க உரிய தரப்புக்கள் உதவ வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கையை முன்வைத்தார்.
கல்வியங்காட்டில் உள்ள இல்லத்தில் ஊடகங்களுக்கு இன்று கருத்துத் தெரிவித்த போதே தந்தை சுந்தரலிங்கம் அருணகிரிநாதர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், 2006ம் ஆண்டு 10ம் மாதம் 25ம் திகதி
நல்லூர் அரசடி இராணுவ சோதனைச் சாவடியில்
இராணுவத்தினால் எனது மகன் அருணகிரிநாதன் சுதன் பிடித்து செல்லப்பட்டார். அதன் பின்னர் சில காலம் எனது மகனை இராணுத்தினர் வைத்திருந்ததை எமது உறவினர்கள் நண்பர்கள் பலரும் கண்டு எனக்கு தெரியப்படுத்தியிருந்தனர்.
குறித்த விடயத்தை பல்வேறு தரப்பினருக்கும் தெரியப்படுத்தியபோதும் அப்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து பேசியபோது 48 பேர் கொண்ட கைதிப்பட்டியலில் தனது மகனும் இருப்பதை உறுதிப்படுத்திய நிலையில் மகனின் விடுதலையை கோரியபோதும் அது சாத்தியப்படவில்லை.
“நாங்கள் நிரபராதிகள் விடுதலைக்கு உதவுங்கள் பூசாவில் தடுத்து வைக்கப்பட்டிருப்போர் அமைச்சர்களிடம் வேண்டுகோள்” எனும் தலைப்பில் 2007 செப்டம்பர் 8ம் திகதி தினக்குரல் பத்திரிகையில் வெளியான செய்தியில் உள்ள புகைப்படத்தில் எனது மகனும் சிறைக்குள் இருப்பது தெரிய வந்தது.
மேலும் தினக்குரலில் வெளியான செய்தியின் படி அப்போது இருந்த
அமைச்சர் ராஜித சேனராத்ன பிரதி அமைச்சர்களான பி.ராதாகிருஸ்ணன், கே.ஏ.பாயிஸ் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர், உள்ளிட்ட பலரும் பூசா முகாமில் கைதிகளை பார்வையிட்டனர் என்றுள்ளது.
இது தொடர்பில் தற்போதும் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் ராஜித சேனாரட்ன உள்ளிட்ட அதிகாரிகள் உண்மை நிலையை தெளிவுபடுத்த வேண்டும்.
சிறைச்சாலையில் இருந்து பரீட்சை எழுதும் கைதிகள் தொடர்பாக
மேலுமொரு இணைய ஊடகமொன்றில் தற்போது வெளியான புகைப்படத்தில் எனது மகன் இருப்பதும் அறியவந்தது. இவ்வாறு எனது மகன் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 0776323036 என்ற இலக்கம் ஊடாக தொடர்பு கொள்ளுங்கள்.
எனது மகன் பற்றிய விடயங்களை காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம், மனித உரிமைகள் ஆணைக்குழு, சிறைச்சாலைகள் என இதுவரை பல இடங்களுக்கு சென்ற போதும் உரிய பதில் கிடைக்கவில்லை.
அண்மையில் காணாமலாக்கப்பட்டவர்களின் அலுவலகம் குறிப்பிட்ட சிலரை கண்டுபிடித்தாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் எனது மகனை கண்டுபிடித்து தர வேண்டும் என்றார்.
உள்ளூர்
சித்திரத் தேர் வெள்ளோட்டம்!
மட்டக்களப்பு குருமண்வெளி அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய சித்திரத்தேர் வெள்ளோட்டம் 2024-02-24ம் திகதி சனிக்கிழமை மாசி மகத்தன்று மாலை 03-30 மணியளவில் இடம்பெற உள்ளது
அனைவரும் வருக… அருள்பெறுக…
-ஆலய பரிபாலானசபை
உள்ளூர்
EPF – ETF மனுக்கள் தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவு!
உள்நாட்டு கடனை மறுசீரமைப்பதில் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் உறுப்பினர்களுக்கு பாதகம் ஏற்படுவதாக குற்றம்சாட்டி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை ஒக்டோபர் 30 ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டது.
இது தொடர்பான மனுக்கள் எஸ். துரைராஜா, ஷிரான் குணரத்ன மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது.
சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன, நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைத்து, இந்த மனுக்களை விசாரணை செய்யாமல் நிராகரிப்பதற்கு அடிப்படை ஆட்சேபனைகளை முன்வைப்பதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்கள் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த மனுக்களை விசாரிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தனது அடிப்படை ஆட்சேபனையில் குறிப்பிட்டுள்ளார்.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர் சங்கத்தின் அழைப்பாளர் என்டன் மார்கஸ் உள்ளிட்ட 04 தரப்பினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
உள்ளூர்
மாகாண சபை தேர்தல் நடந்த வேண்டும்!
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் இன்று (23) யாழில் ஊடக சந்திப்பினை நடாத்தினர்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் இருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருடன் ஒரு சந்திப்பில் ஈடுபட்டோம். அதில் இலங்கை தொடர்பான பிரச்சினைகளை தெரிவித்தோம்.
தமிழ் மக்களின் காணிகளை சுவிகரிப்பது, தமிழ் மக்களின் பல பிரச்சினைகள் தொடர்பிலும் தெரிவித்தோம்.
அத்தோடு நாட்டில் மாகாண சபை தேர்தல் நடந்த வேண்டும் என்றும் 13 ஆவது திருத்தத்தில் வழங்கப்பட்ட அதிகாரங்களை வழங்கப்பட வேண்டும் என அவரிடம் தெரிவித்தோம் என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
-
இந்தியா1 year ago
இந்திய சினிமாவில் கதாநாயகியாக களமிறங்கும் யாழ் யுவதி!
-
உள்ளூர்1 year ago
கொழும்பில் இளம் குடும்பஸ்தர் படுகொலை; பதைபதைக்கும் சம்பவம்!
-
ஆன்மீகம்1 year ago
நேருக்கு நேர் இருக்கும் புதனும், சனியும் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் அந்த 4 ராசிக்காரர்களுக்கும் யார்?
-
வாழ்க்கைமுறை1 year ago
நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகின்றீர்களா?
-
உள்ளூர்1 year ago
யாழ் பல்கலைக்கழக மாணவியொருவர் தூக்கில் தொங்கி உயிரிழப்பு
-
இந்தியா1 year ago
குறைவடைந்த தங்கத்தின் விலை; தங்கம் வாங்க சரியான நேரம் இது தான்!
-
ஆன்மீகம்1 year ago
1113 ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ள அரிய சேர்க்கை ; ஜோதிடம் கூறுவது என்ன?
-
உள்ளூர்1 year ago
யாழில் பிரபல நகைக்கடை உரிமையாளரின் மனைவி கைது!